Header Ads

காணாமல்போன கிராம அலுவலகருக்கு ஏற்பட்ட நிலை!



 அருவியாற்றுப் பாலத்தின் அடியில் குளிக்கச் சென்றபோது சுழிக்குள் அகப்பட்டு காணாமல்போன கிராம அலுவலகர் இன்று (வியாழக்கிழமை) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் கிராம அலுவலகர்கள் ஆற்றில் குளித்தபோது ஒரு கிராம அலுவலகர் காணாமல்போயிருந்ததோடு, ஏனைய அலுவலகர்கள் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து, காணாமல்போன கிராம அலுவலகரை தேடும் பணியில் கடற்படை மற்றும் வங்காலை, அரிப்பு கிராம மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அரிப்பில் இருந்து கடல் தொழில் நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டு அரிப்பு ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அருவி ஆற்றில் காணாமல்போன கிராம அலுவலகர் அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.