Header Ads

15ம் திகதி முதல் ஊரடங்கு - கடுமையக்கப்படும் சட்டம்!!

 தொடர்சியான கொரோனாத் தொற்றுக்கள் அதிகரித்தது வரும் நிலையிலும், எதிர்வரும் 15ம் திகதி, உள்ளிருப்புக் கட்டப்பாடு நீக்கப்பட்டு ஊரடங்கு அமுலாக உள்ளதாகப் பிரதமர் அறிவித்துள்ளார்.





டிசம்பர் 15ம் திகதி முதல், மாலை 20h00 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குக் காலத்தில், வேலை, மருத்துவம், மற்றும் மிகவும் அத்தியாவசியக் காரணங்களிற்காக வெளியே செல்வதற்கு, புதிய அத்தாட்சிப் பத்திரம் அத்தியாவசியம் எனவும், இந்தப் பத்திரம் விரைவில் உள்துறை அமைச்சகத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்படும்.

இந்தக் காலப்பகுதியில், மிகவும் கடுமையான வீதிச் சோதனைகளைக் காவற்துறையினர் மேற்கொள்வார்கள் என்றும், மீறுபவர்களிற்கு மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.



வருட இறுதி நாளான டிசம்பர் 31ம் திகதி கூட 20h00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் விதிவிலக்குகள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 24ம் திகதி இரவு மட்டும் ஊரடங்கு தளர்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.