Header Ads

🔴 அவதானம்! - இரவு நேர ஊரடங்கில் நேர மாற்றம்!

 




இரவு நேர ஊரடங்கில் நேர மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 
டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். ஆனால் முன்னர் அறிவிக்கப்பட்டது போல், இரவு 9 மணி முதல் ஊரடங்கு ஆரம்பிக்காமல், ஒருமணிநேரம் முன்னதாக, இரவு 8 மணிக்கே ஊரடங்கு நடைமுறைக்கு வரும். இத்தகவலை சற்று முன்னர் பிரதமர் Jean Castex அறிவித்தார். 
 



அவர் மேலும் தெரிவிக்கையில், “மிக கடுமையான மற்றும் இறுக்கமான கண்காணிப்புகள் தொடரும்!’ என எச்சரித்துள்ளார். 
 
முன்னதாக, டிசம்பர் 15 ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும், 9 மணியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.