Header Ads

🔴 கொரோனா தொற்றின் பின்னர் ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட செய்தி..!!


 


கொரோனா தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
அதில் தாம் நலத்துடன் இருக்கின்றேன் எனவும், மிக மெதுவாகவே செயற்பட முடிகிறது எனவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். தனிமையில் இருந்துகொண்டு அத்தியாவசியமான கோப்புகளை (dossiers prioritaires) தாம் பார்வையிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மக்ரோன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் ஜனாதிபதி ஓய்வு மாளிகையான Versailles  நகரில் உள்ள la Lanterne மாளிகையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். 
 
அங்கிருந்து வீடியோ மூலம் தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றார். 
 
இந்நிலையிலேயே அவர், தனது சமூக வலைத்தள கணக்கின் ஊடாக மேற்படி தகவலை வெளியிட்டார். 

No comments

Powered by Blogger.