🔴 இரவு நேர ஊரடங்கின் போது எவருக்கும் வெளியில் செல்ல அனுமதி இல்லை!!
இரவு நேர ஊரடங்கின் போது எவருக்கும் வெளியில் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது,
<<வரும் டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை வெளியில் செல்ல எவ்வித அனுமதி பத்திரங்களும் தேவையில்லை. ஆனால் இரவு 8 மணிக்கு அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும். வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை!>> என தெரிவித்தார்.
<<இரவு 8 மணியின் பின்னர் ஒரு சிலருக்கு மாத்திரம் அனுமதி உள்ளது. வேலைக்குச் செல்லவும், வேலை முடித்து வீடு திரும்பவும் மாத்திரமே அனுமதி உண்டு. வேறு எந்த காரணத்துக்காகவும் வெளியில் செல்ல முடியாது!>> எனவும் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
No comments