Header Ads

ஊரடங்கு -20h00 மணிக்கு அனைவரும் வீட்டிற்குள் - அனைத்தும் மூடப்படல் வேண்டும்!!




 எதிர்வரும் 15ம் திகதி முதல் வர்த்தக நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்படல் வேண்டும்.


மருத்துவ மனைகள், மருந்தகங்கள், விமான நிலையங்கள் போன்ற அத்தியாவசியமான சேவைகள் தவிர்ந்த, மற்றவை அனைத்தும் 20h00 மணிக்கு மூடப்படல் வேண்டும்.

20h00 மணிக்கு மூடப்படும் வரத்தக நிலையங்கள் மற்றும் மூடப்பட வேண்டிய சேவைகளில் பணி புரியவர்கள், தகுந்த அத்தாட்சிப் பத்திரத்துடன் 20h00 மணிக்குப் பின்னர் வீடு நோக்கிச் செல்ல முடியும்.

அத்தியாவசியச் சேவைகளில் பணி புரிபவர்கள் அத்தாட்சிப் பத்திரங்களுடன், சேவை முடியும் நேரத்திற்குப் பின்னர் அத்தாட்சிப் பத்திரத்துடன் வீடு செல்ல முடியும்.

எக்காரணம் கொண்டும் எந்தவிதமான வர்த்தக நிலையங்களும், 20h00 மணிக்குப் பின்னர் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், கடுமையான கட்டுப்பாடுகள், மற்றும் வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்படும் எனவும், இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.