Header Ads

கனடா-அமெரிக்காவிற்கு இடையிலான எல்லை எப்போது திறக்கப்படும்…?

 


கொரோனா வைரஸின் தாக்கமும் பாதிப்பும் அதிகரித்த நிலையில் கனடா- அமெரிக்க எல்லையானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள், வர்த்தக மற்றும் அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில், ஜனவரி 21-ஆம் திகதி வரை எல்லையை மூடிவைப்பதாக கனடா அரசு அறிவித்திருந்தது.

அந்த கால வரையறை முடிவதற்கு 1 வாரத்திற்கு முன்னரே, இப்போது மேலும் ஒரு மாதத்திற்கு கனடா-அமெரிக்கா எல்லையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையை நீட்டிக்க முடிவெடுத்துள்ளது.

இதனால், கனடா-அமெரிக்கா எல்லை வரும் பெப்ரவரி 21-ஆம் திகதி வரை மூடப்படுவதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாம் அலையில் இரு நாடுகளும் தாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனடாவில் இதுவரை 17,000க்கும் அதிகமானோர் மற்றும் அமெரிக்காவில் 375,000க்கும் அதிகமானோர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.