Header Ads

இலங்கையில் ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தில் மாற்றம்!

 


இலங்கையில் ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தில் மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணிய தொடர்பாக நெகிழ்வான நேரத்தை அறிமுகம் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான தகவலை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.

பணியாளர் ஒருவர் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களில் நேரத்திற்கு முன்னர் பணிக்கு வர முடியும். சில நேரங்களில் தாமதமாக கூடும். எனினும் 40 மணித்தியாலங்களை பூர்த்தி செய்வது மாத்திரமே அவசியமாகும் என அவர் கூறியுள்ளார்.

அனைவரும் ஒரே நேரத்தில் பணிகளை ஆரம்பித்து வேலைகளை நிறைவு செய்வதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நெகிழ்வான கடமை நேரங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.