Header Ads

போலி தகவல்கள் கூறி இலங்கை வந்த சுற்றுலா வந்த பயணிகளால் ஆபத்து?

 


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைனை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் இலங்கை வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை முடிவுகளுடன் அவர்கள் இலங்கை வந்தனர் அந்த ஆவணங்கள் அவர்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்தன என சுகாதாரசேவைகள் பிரதி இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப்பயணிகளிற்கு கிசிச்சை வழங்குவதற்கு சில அரசமருத்துவமனைகள் முன்வந்துள்ள போதிலும் சுற்றுலாப்பயணிகள் தயக்கம் வெளியிடடுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக தனியார் மருத்துவமனைகளுடன் சுற்றுலாப்பயணிகளிற்கு சிகிச்சை வழங்குவது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.