Header Ads

கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்தில் உணவு பெற்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 


கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் தனிமைப்படுத்தல் மையத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் வழங்கப்பட்ட உணவிலேயே இவ்வாறு புழுக்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுகள் பார்சல் மூலம் வழங்கப்படுகின்றது. அதனை கதிரை ஒன்றில் வைத்துவிட்டு சென்று விட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுதொடர்பாக தனிமைப்படுத்தல் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் தெரிவிக்க முற்பட்டது. இருந்த போதும் கருத்திலெடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் பணிமனைக்கு தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.