Header Ads

யாழில் இன்று முதல் வழமைக்கு திரும்பும் புகையிரத சேவைகள்..!



 இலங்கையில் கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் (18.01.2021) திறக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் இன்று புறப்பட்டுள்ளன.

முதலாவதாக காங்கேசன்துறையிலிருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ் தேவி புகையிரத சேவையும் சேவையை ஆரம்பித்துள்ளன.

அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55 க்கும் , 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ் தேவி புகையிரதமும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் இன்று சேவையை ஆரம்பித்துள்ளன.

ஏனைய புகையிரத சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையிரதமும், இரவு தபால் புகையிரதம் உட்பட அனைத்து புகையிரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது.

பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரதத்தில் பயணத்தினை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.