Header Ads

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் குவிக்கப்பட்டுள்ள பொலிசார்!

 


முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருவதாக கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், செ.கஜேந்திரன், வினோநோகரதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமார் உள்ளிட்டவர்களுடன் ஊடகவியலாளர்களும் குருந்தூர் மலைக்கு சென்றிருந்தனர்.

அங்கு அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன் குருந்தூர் மலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் சென்று பார்வையிட அனுமதித்துள்ளார்கள். அதற்கு முன்னர் பொலிசாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் குருந்தூர் மலை மக்களின் வழிபாட்டு உரிமை தொடர்பில் கருத்து முரண்பாடு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் குருந்தூர் மலைக்கு செல்வதற்கு கேட்டபோதும் முல்லைத்தீவு பொலிசார் அனுமதி மறுத்துள்ளார்கள்.

இதேவேளை பொலிசாரின் படப்பிடிப்பாளர், தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்களும் அங்கு நடத்த சம்பவங்கள் அனைத்தினையும் ஒளிப்பட பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

அவர்கள் மலைக்கு சென்றுள்ளமையினை மாவட்ட ஊடகவியலாளர்கள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டித்துள்ளார்கள்.

தெற்கில் ஒரு நீதி வடக்கில் ஒரு நீதியா படையிரின் ஏற்பாட்டில் குருந்தூர் மலையில் நாளை இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்களத்தின் வேலைத்திட்டத்தினை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: 2 people, outdoor

Image may contain: one or more people, people standing, tree and outdoor
Image may contain: 1 person, standing and outdoor

No comments

Powered by Blogger.