Header Ads

கொழும்பில் 78 கொரோனா தொற்றாளர்கள் வீடுகளிலேயே மரணம்



 கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 6 மாதங்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 78 பேர் தமது வீடுகளிலேயே மரணித்துள்ளனர்.

கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் இதனை தெரிவித்தார்.

இக்காலப்பகுதியில் வீடுகளில் உயிரிழந்த 383 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு முன்னெடுக்கப்ப்ட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே 78 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வீடுகளில் மரணிப்போருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடை முறை கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இருந்த போதும், வீட்டில் உயிரிழந்த முதல் கொவிட் தொற்றாளர் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதியே அடையாளம் காணப்பட்டதாகவும், அது முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் இந்த வீடுகளில் நிகழ்ந்த 78 கொவிட் மரணங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதான சட்ட வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் கூறினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு, கடந்த முதலாம் முதல் 25 ஆம் திகதிவரை வீடுகளில் நிக்ழ்ந்த 130 மரணங்கள் பதிவானதாகவும் அதில் 37 மரணங்கள் கொவிட் 19 தொற்றினால் நிகழ்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்தன.


No comments

Powered by Blogger.