மீன் சந்தையால் மீண்டும் 689 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி சம்பவம்
தாய்லாந்தில் சற்று கொரோனா தாக்கம் தணிந்திருந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
தாய்லாந்தின் தலைநகரான பங்காக்குக்கு அருகே அமைந்துள்ளது சமூத் சகோன் என்ற மாகாணத்தில் மிகப் பெரிய கடல்சார் உணவுப்பொருள் சந்தையாக விளங்கக்கூடிய மாகாசாய் சந்தை இருக்கிறது.
இந்த மிகப்பெரிய கடல்சார் உணவு சந்தையான மகாசாய் சந்தையில் இறால் விற்ற 67 வயதான பாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவரிடமிருந்து வைரஸ் பரவத் தொடங்கி, 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
இந்தச் சந்தையிலிருந்து மீண்டும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்த மாகாணத்தை முழுமையாக மூட தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சந்தையில் அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
அந்தத் தொழிலாளர்களை வெளியே வரவேண்டாம் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அளவுக்கு மீண்டும் தாய்லாந்தில் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம் என ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் அங்கு ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டு, சமூத் சகோன் மாகாணத்தில் அடுத்த வருடம் ஜனவரி 3-ம் திகதி வரை இரவு நேர ஊரடங்கும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
No comments