இலங்கையில் 30 குழந்தைகளுக்கு நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்!
இலங்கையில் கர்ப்பிணி பெண்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தைகளை பணத்திற்காக வெளியாறுக்கு விற்றுவந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இதுவரையில் இவ்வாறாக 30 குழந்தைகளை விற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கர்ப்பமடைந்து பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள பெண்களை தொடர்புகொண்ட தம்முடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அவர்களின் குழந்தைகளை இந்த நபர் விற்றுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் நேற்று இரவு மாத்தளை உக்குவெல்ல பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
47 வயதுடைய இவர் மொரட்டுவ பகுதியில் பேபி பார்ம் முறையில் கர்ப்பிணி பெண்களை பராமரித்து அந்தக் குழந்தைகளை விற்றுள்ள நிலையில் அவரால் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 12 பெண்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
No comments