Header Ads

நெடுந்தீவு கடலில் மீனவர்களுடன் மூழ்கிய இந்திய றோலர்

 


யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் நேற்று இரவு இந்திய மீனவர்களின் படகு மூழ்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ற்கும் மேற்பட்ட இந்திய றோலர் படகுகள் நேற்று இரவு நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாக ஸ்ரீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அத்துமீறிய மீன்பிடிபடகுகளை கைது செய்ய முயற்சித்த போது இந்திய மீனவர்களின் றோலர் படகு ஒன்று ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகுடன் மோதியபின்னர் தப்பிச் செல்ல முயன்றவேளை, அதில் இந்திய றோலர் மூழ்கிய தாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மூழ்கிய படகிலிருந்த இந்திய மீனவர்களை தேடி வருவதாக ஸ்ரீலங்கா கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் சேதமடைந்த ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு திருத்த பணிகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்திய மீனவர்களின் படகு மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் மோதியதில் நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கிய யேசு என்பவரின் றோலரில் சென்ற மெசியா அந்தோனிராஜ்( வயது 30 ) நாகராஜ் வெள்ளச்சாமி ( வயது 52 ) சாம் ரேசப்பெருமாள் (வயது 28) செந்தில்குமார் செல்வம் ( வயது 35 ) ஆகிய மீனவர்களே காணாமற் போயுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.