வவுனியாவில் திருமண வைபவங்களுக்கு தடை விதிப்பு..!
இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வவுனியா மாவட்டதின் பொதுச்சந்தைகளை மீள திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மருதனார் மட கொத்தணியில் இருந்து தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்ட பொதுச்சந்தைகளை இன்று முதல் மீளவும் பழைய இடங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments