Header Ads

கல்வி அமைச்சு சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 


2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் இன்று நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நிறைவடையும்போது, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இதன்படி 2021 ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணையின்போது, மாணவர்கள் வகுப்பேற்றப்பட்ட வகுப்பில் கல்வி கற்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அமைவான பாடப்புத்தகங்களை இந்த ஆண்டு முடிவடைவதற்குற்குள், அனைத்து மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கும், மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும், வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும், அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.