Header Ads

இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 


இலங்கையில் அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுவர்கள் வீடு கொள்வனவு செய்வதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறதென குறிப்பிடப்படுகின்றது.

2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 6.25 வீத சலுகை வட்டியின் கீழ் விசேட கடன் வழங்கப்படவுள்ளது.

நிதி அமைச்சின் தகவலுக்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைய, வீடுகள் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

பல்வேறு பிரதேசங்களில் இருந்து கொழும்பு உட்பட பிரதேசங்களில் பணியாற்றும் இளைய தலைமுறையினருக்கு இந்த யோசனை முறைக்கு முன்னிலை வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள முழுமையான கடன் தொகை 10 மில்லியன் ரூபாயாகும்.

குறித்த கடனை மீள செலுத்த வழங்கப்படும் காலம் 25 வருடங்களாகும். இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியில் இந்த கடன் செயற்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.