Header Ads

மனைவியுடன் தனிமையில் இருந்த காதலனை நிர்வாணமாக அழைத்துச் சென்ற கணவன்!

 



இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் பக்ஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தோர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தேசிய வேலை வாய்ப்பு மையத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரத்தோர் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவருக்குக் கிறிஸ்துமஸ் பரிசாக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

அதன் பின், இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் கணவன் வீட்டிற்கு வர இருவரையும் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, அந்த பெண்ணின் கணவருக்கும் ரத்தோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, அந்த பெண்ணின் கணவர் ரத்தோரை எச்சரித்து விட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.

மறுநாள் அந்த பெண்ணின் கணவரின் நண்பர்கள் சிலர் ரத்தோரை பிடித்து அவரை அடித்து அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து நிர்வாணமாக்கி அந்த கிராமம் முழுவதும் ஊர்வலமாகக் கூட்டிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் கிராமம் முழுவதும் தெரியவந்தது நிலையில் ரத்தோர் அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர்

No comments

Powered by Blogger.