இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!
இலங்கையில் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு பொலிஸார் இன்று வலியுறுத்தியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலர் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள சிலர் சுகாதார அதிகாரிகளுக்கு உதவவில்லை என கூறினார்.
அவ்வாறு சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை நிராகரித்தால், அவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படுவார்க்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு தனிமைப்படுத்தல் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக அட்டலுகமவில் உள்ள பலர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments