Header Ads

இலங்கை மக்களிடம் முக்கிய வேண்டுக்கோள் விடுத்த சுகாதார அதிகாரிகள்!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களில் சிலர் கொரோனா சோதனை செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இவர்கள் அச்சத்தை விடுத்து வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பி.சி.ஆர் மற்றும் விரைவான அன்டிஜென் சோதனை செயல்முறைகளில் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அந்தவகையில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பி.சி.ஆர். சோதனைகள் இதுவரை அரச, தனியார் மற்றும் பல்கலைக்கழக பரிசோதனை நிலையங்களில் நடத்தப்பட்டுள்ளதாக டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 68 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் கொரோனா தொற்று ஊர்தியானவர்களில் 7,080 பேர் தொடர்ந்தும் சிகிசிச்சை பெற்றுவருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.