நினைவுத் தூபி இடிப்பு இந்தியாவுக்கு எதிரான இலங்கை அரசின் ஓர் இராஜதந்திர தாக்குதல்! திபாகரன்
தற்போது இலங்கையில் இந்திய -இலங்கை – சீன முக்கோண அரசியல் போட்டி அரங்கேறி வருகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான நினைவுத் தூபியை இலங்கை அரசு இடித்தமை இந்த முக்கோண அரசியல் இராஜதந்திர போட்டியின் ஓர் அங்கமே” என கட்டுரையாளர் தி. திபாகரன், தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.அரச இயந்திரத்தின் உதிரிப் பாகமாக விளங்கும் தமிழ் உயர் அதிகாரிகளைப் பயன்படுத்தித் “தன் கையால் தன் கழுத்தை அறுக்க வைக்கும்” தமிழின எதிர்ப்பு அரசியலை அரசு மிக வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றது.
அதன்படி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரை கருவியாகக் கொண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இலங்கை அரசு உடைக்கச் செய்தமை அமைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த இந்த தூபியை, அத்துடன் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தபின்பும் ஒரு வருடத்திற்கு மேலாக நடைமுறையில் இருந்துவந்த இந்தத் தூபியைத் திடீரென்று இரவோடு இரவாக அரசு உடைத்தமைக்குப் பின்னால் இருந்த அரசியல் ராஜதந்திர பின்னணி என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
வெளிப்படையாக பார்த்தால் அது ஈழத் தமிழருக்கு எதிராக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சார்ந்த விடயம் போலத் தோன்றினாலும் அடிப்படையில் இந்திய – இலங்கை -சீன அரசுகள் சார்ந்த அரசியல் இராஜதந்திர விவகாரமாகவே உள்ளது.
இலங்கைத் தீவை மையமாகக்கொண்டு சீனா வகுப்பிற்கும் இந்து மாகடல் சார்ந்த பிராந்திய அரசியல் மற்றும் உலகளாவிய அரசியல் வியூகத்திற்குள் இலங்கையைத் தனது இடுக்குப் பிடிக்குள் வைத்திப்பதற்கான அரசியலை சீனா முன்னெடுத்து வருகின்றது
No comments