Header Ads

மட்டக்களப்பில் 5வது மரணம் பதிவானது – எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

 


மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்

மட்டக்களப்பு நகரில் நேற்று ஐந்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. அரசடி சந்தை வீதியில் உள்ள வீட்டில் 79 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ள அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக முடக்கப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், வீதி போக்குவரத்து அனுமதி வழங்கும் காரியாலயம் என்பனவற்றுக்கு செல்லும் வீதிகளும் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 467ஆக அதிகரித்துள்ளதாக டாக்டர் மயூரன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.