Header Ads

இலங்கையில் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்!

 


கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எஹெலியகொட பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட மின்னான, போபத்எல்ல, விலேகொட, அஸ்கங்குல மற்றும் யக்குதாகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்நு விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாணந்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட 675 தொடவத்த கிராம சேவகர் பிரிவும் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மக்கொன கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.