Header Ads

2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!

 


இலங்கையில் மீண்டும் 2000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யூ. டி. லக்ஷ்மன் இதனை தெரிவித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்திற்கொண்டு 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படவுள்ளதாக அவர் குநிப்பிட்டுள்ளார்.

நாணயத்தாள்களின் 11வது வெளியிடுகையாக இது 2021இல் அச்சிட்டு வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மஹிந்த ராஜபகச முன்னைய அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தபோதே 2000 ரூபா நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதேவேளை 1950ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட ஆரம்பித்தபோது இலங்கை ரூபாவின் டொலருக்கு எதிரான பெறுமதி 4 ரூபா 70 சதமாக இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.