பாகிஸ்தானில் வெடி விபத்தில் தரைமட்டமாகிய கட்டிடம்! 8 பேர் பலி
பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள ஐஸ் தொழிற்சாலையின் பாய்லர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெடித்துச் சிதறியதில் முழு கட்டிடமும் தரைமட்டமாகியுள்ளது.
50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைந்து வந்த ஏராளமான பொலிசாரும் மீட்பு குழுவினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு வரை நீடித்தது.
வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 பேர் காயமடைந்ததாகவும் கராச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
No comments