மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்
இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டது.
இவ்வாண்டு ஆரம்ப காலங்களில் பல மாகாணங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கவில்லை.
ஆகவே மேல் மாகாணத்தில் அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளை திறப்பது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுள் தயாரிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளில் பாடசாலைகளை திறப்பதற்கான சூழ்நிலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில் 11 ஆம் தரத்திற்கு மாத்திரம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments