மின்சார கம்பியின் மீது உரசி சென்ற பேருந்தால் நேர்ந்த விபரீதம்! 4 பேர் பலி!
இந்தியாவில் தஞ்சையில் இருந்து நேற்று பகல் தனியார் பேருந்து திருவையாறு நோக்கி புறப்பட்டு சென்றதில் 50 பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்த பஸ் திருவையாறை அடுத்த வரகூர்-கண்டியூர் வீதியில் சென்று கொண்டிருந்தது.
பேருந்து ஓட்டுனர் முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பியின் மீது பேருந்து உரசியுள்ளது.
இதில் பேருந்தில் இருந்த 5 பேருக்கு மின்சாரம் தாக்கப்பட்டு 4 பேர் சம்பவ இடத்திலேயயே உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த திருவையாறு பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துசி சென்றனர்.
மேலும் காயமடைந்த 10 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments